வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை…

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று தொடங்கி, மார்ச் 7ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது. சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.15 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

10ம் நாள் திருநாளான மார்ச் 6ஆம் தேதி காலை கீழப்பாவூர் சிவன்கோயில், பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையடிப்பட்டி, திப்பணம்பட்டி, அரியப்பபுரம், வெய்க்காலிப்பட்டி, ஆரியங்காவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து பால் குடங்களுடன் ஊர்வலமாக வருவர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், பூஜை, அலங்காரம் நடைபெறும்.

நிறைவு நாளான மார்ச் 7ஆம் தேதி கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தெப்பக்குளம் அருகில் வைத்து சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், பூஞ்சப்பரகாட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெறும். திருவிழாவிற்கான எற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.