முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்ககள் குறித்து முதலமைச்சர் விஜய் அவ்வப்போது அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் நேற்று சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்.29) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்களிடம் முதலமைச்சர் கேட்டறியவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.