முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பரந்தூர் விமான நிலைய நில விவகாரம் குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், குறுகிய காலத்தில் 8 ஆவது அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது.







