ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சந்தையில் முட்டைக்கோஸ் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய முட்டைக்கோஸ் குளிர் மற்றும் சமவெளி பகுதிகளில் விளையும் பயிராகும். இதை, சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர், தம்மம்பட்டி, அய்யங்கரடு மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள கருமந்துறை, வெங்காயக்குறிச்சி, கரியகோவில், பகடுப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர்களில் விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது பருவ மழை பெய்து வந்த நிலையில் முட்டைக்கோஸ் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்தது.
இதனால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான முட்டைக்கோஸ், தற்போது 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
—சௌம்யா.மோ







