முக்கியச் செய்திகள் இந்தியா

இடைத்தேர்தல்; இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியது காங். – வடகிழக்கில் பாஜக

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜக-கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இமாச்சல பிரதேசம், தாத்ரா – நாகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 3 மக்களவை தொகுதிகளுக்கும், 29 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த அக்.30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் இமாச்சல பிரதேசத்தை கைப்பற்றியுள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களை பாஜக-கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் ஃபதேபூர், ஜுப்பல்-கோட்காய் மற்றும் அர்கி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மாநிலத்தின் மண்டி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஞானேஷ்வர் பாட்டீல் முன்னிலையில் உள்ளார். தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை தொகுதியில் சிவசேனா வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அசாமில் 5 பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல மற்ற இரண்டு தொகுதிகளில் (UPPL ) பாஜகவுடன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் தின்ஹாடா மற்றும் சாந்திபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றே தீரவேண்டும் என அழுத்தம் இருந்தது. இது அக்கட்சிக்கு கவுரவமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ்தான் இதில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் எம்எல்ஏ ஜான்குமாருக்கு பதவி கேட்டு பாஜக அலுவலகம் முற்றுகை

Gayathri Venkatesan

புதுச்சேரியில் இன்று 2 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா; நெருக்கடியில் நாராயணசாமி அரசு!

Gayathri Venkatesan

12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Ezhilarasan