முக்கியச் செய்திகள் உலகம்

காபூல் ராணுவ மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானில் காபூல் ராணுவ மருத்துவமனையருகே பயங்கர குண்டு வெடிப்பு  நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து தற்போது தலிபான்கள் தங்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய ராணுவ மருத்துவமனையான காபூல் சர்தார் முகமது தாவூத் கான் மருத்துவமனை வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இது குறித்து பேசிய, நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி, குண்டு வெடிப்பு சம்பவத்தை உறுதி செய்துள்ளார். மேலும், உயிரிழப்புகள் குறித்து மேலதிக தகவல்கள் ஏதும் பதிவாகவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக பாதுகாப்புப் படையினர் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத சூழலில், ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்காலம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதில் 19 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

இந்தியில் சிபிஐ அதிகாரியாக நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan

தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களிடம் வருகின்றனர்: முதல்வர்!

Ezhilarasan

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்

Halley karthi