50 பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து: ஒருவர் பலி

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன்  சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிகாருக்கு 50 பயணிகளுடன் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று…

உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 50 பயணிகளுடன்  சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிகாருக்கு 50 பயணிகளுடன் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோ – ஆக்ரா எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்றபோது பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 5 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஏராளமான ஆம்புலன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.