50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது !

தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம். தமிழ்நாட்டில்,…

தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1,400 பேருந்துகள் இயக்கம்.

தமிழ்நாட்டில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று பரவல் குறைவாக உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பேருந்துகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 6 மணி முதல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.