தமிழ்நாட்டில் அடுத்தக் கட்ட ஊரடங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில், 2-ம் அலை கொரோனா பரவல் அதிகரித்ததால், கடந்த மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு தளர்வில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்ளிட்டடோர் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.







