முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் உயர்கிறதா பேருந்து கட்டணம்? அமைச்சர் சொல்வது என்ன?

மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கூறினார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அமைச்சர் நேரு, அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்தது. தற்போது நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் உயர்ந்து வரும் எரிபொருட்கள் விலையினால் போக்குவரத்து கழகங்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. எனவே மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர்  முக ஸ்டாலின் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசு சொத்துவரியை 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகள்தான் என காரணம் கூறினர். தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு எரிபொருள் விலை உயர்வு என கூறத் தொடங்கியுள்ளனர். எந்த ஒரு செயலை செய்தாலும், அவை மக்களை பெரிதும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசிடம் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

விஜய் மீதான அபராதத்துக்கு இடைக்கால தடை

Saravana Kumar

”திமுக ஆட்சி அமைய சபதமெடுப்போம்”- உதயநிதி ஸ்டாலின்!

Jayapriya

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இதுவரை 2,563 வேட்புமனுக்கள் தாக்கல்

Saravana Kumar