மீன்வலையில் சிக்கிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகள்; போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேம்பனூர் குளத்தில் மீன்வலையில் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கியதாக பரவிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேம்பனூர் குளத்தில் மீன்வலையில்
2000 ரூபாய் நோட்டு கட்டுகள் சிக்கியதாக பரவிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் பேங்க் ஆஃப்
இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வேம்பனூர் குளத்தில் மீன்பிடி தொழிலாளர்கள்
வலை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மீன் வலையில் 2000 ரூபாய்
நோட்டு கட்டுகள் 20 எண்ணம் சிக்கியதாக தகவல் பரவியது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நோட்டு கட்டுகளில் சில்ட்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா என்று குழந்தைகள்
விளையாடும் ரூபாய் நோட்டுகள் என்பதும் ,மேலும் புதிய ரூபாய் நோட்டு கட்டுகளில்
உள்ளது போல் வங்கி நூல் கட்டும் போடப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதியில் சினிமா சூட்டிங் நடந்தது என்பதும்
தெரியவந்துள்ளது சினிமா சூட்டிங் முடிந்த பிறகு பணக்கட்டை வீசி சென்று
இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.