மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கையும், விவசாயத்திற்கான முதல் நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்…

மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கையும், விவசாயத்திற்கான முதல் நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்க செய்யவுள்ளதாக கூறியுள்ளார். இதில் வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவுள்ள விவசாயத்திற்கான நிதிநிலை அறிக்கையை, விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்களை கலந்தாலோசித்திட வேண்டும் எனவும்,

விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் உழைப்புக்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்திட வேண்டும் எனவும் அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.