பட்ஜெட் 2022: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக…

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார், அப்போது போசிய அவர், கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்:

  • 2022-2023ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த கடன் ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.
  • 2022-2023ஆம் ஆண்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும்.
  • திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வருமான வரி தளர்வுகள் அறிவிப்பு.
  • அரசு ஊழியர்களுக்கான வரிச்சலுகை 14%ஆக உயர்வு.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு.
  • புதிய உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.
  • பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிப்பு.
  • ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்பது சாத்தியமாகியுள்ளது.
  • கொரோனா காலகட்டத்திலும் ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வசூலித்து சாதனை.
  • டிஜிட்டல் சொத்துகளை பரிசாக பெற்றாலும் வரி விதிக்கப்படும்.
  • மொபைல் சார்ஜர், கேமரா, லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரிச்சலுகை.
    வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.

நடப்பாண்டுக்கான தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை. பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார் நிர்மலா சீதாராமன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.