பட்ஜெட் 2022-ல் குறைக்கப்பட்ட வரி விவரங்கள்?

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…

2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 4வது ஆண்டாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், 2வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இதில், வரிவிதிப்பில் மன்னர் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி மகாபாரத வரிகளை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். பிறகு, வரிகள் குறித்த திட்டங்களை அவர் வெளியிட்டார்.

சிறப்பு அம்சங்கள்:

  • புதிய வரி செலுத்தும் நடைமுறைகள் மூலம் வருமான வரி தாக்கல் அதிகரித்துள்ளது.
  • கூட்டுறவு சங்கங்களுக்கான வரிகள் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்களை போலவே மாநில அரசு ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ராயல்டி மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு சில விதிகளுக்கு உட்பட்டு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • வருமான வரி சோதனையின்போது கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஜனவரி மாத ஜி.எஸ்.டி வரி வசூலில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
  • பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • சில குறிப்பிட்ட ரசாயன பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
  • துருப்பிடிக்காத இரும்பு பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.