#BSP | ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முக்கிய ரவுடி புதூர் அப்பு டெல்லியில் கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, டெல்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை…

#BSP |Armstrong murder case: main rowdy Budur Appu arrested in Delhi!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, டெல்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் குறிப்பிட்டார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முக்கிய நபர்கள் குறித்து காவல் துறை விரைவில் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதில் ரெளடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரௌடி புதூர் அப்பு, டெல்லியில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீஸார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவரான ரௌடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கெனவே இவ்வழக்கில் வழக்கில் தொடர்புடைய 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.