திருவாரூரில் தம்பி மனைவியின் கழுத்தை அறுத்து அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் ஈ.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் இவர் தனது மனைவி மன்றும் தம்பியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே சுந்தரமூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவிற்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பாராமல்
சொர்ணபிரியாவின் கழுத்தை ராஜகோபால் அறுத்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராஜகோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.