முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது; அமைச்சர் ராஜலட்சுமி குற்றச்சாட்டு!

திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது என சங்கரன்கோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எம் ஜி ஆரின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆதி திராவிட நலத்துறை திமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது அது எப்போதும் நடைபெறாது எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமைய உள்ளதாகவும் பேசினார்.

இப்பொது கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணா முரளி ,வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

Halley karthi

மழை வெள்ள பாதிப்பு; அமுதா ஐஏஎஸ் ஆய்வு

Halley karthi

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Saravana Kumar

Leave a Reply