சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புதுக்குளம் கிராமம் ஆலங்கினறு காலணியில் வசித்து வருபவர்கள் சிவன், அருளம்மாள் (வயது70) தம்பதியினர். இவர்களுக்கு அந்தோணி ராஜ் மற்றும் காசிவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். அந்தோணி ராஜ் மற்றும் காசிவேல் ஆகிய இருவரும் ஆலங்கினறு காலனி பகுதியில் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் அந்தோணி ராஜ் இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது தம்பியான காசி வேல், மனைவி இசக்கியம்மாள், மகன் பரத், தாயார் அருளம்மாள் ஆகிய நான்கு பேரும் அந்தோணி ராஜை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் அந்தோணி ராஜ் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை விட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவர் பரிசோதனை செய்ததில் அந்தோணி ராஜ் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறிது நேரத்தில் காசிவேல், அண்ணன் அந்தோணிராஜ் தாக்கியதாக கூறி சாத்தான்குளம் மருத்துமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது இரண்டு குடும்பத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தோணிராஜை கொலை செய்த காசி வேல் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.