தனுஷ் தனது சகோதரர் செல்வராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பதால் நானே வருவேன் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும் அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வ ராகவனால் இயக்கத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இடம் பெறும் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல கவனம் ஈர்த்துவரும் நிலையில் , தனுஷ் மற்றும் எல்லி இருவரும் இடம்பெறும் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவரது முந்தைய படமான திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் ஈட்டி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் நானே வருவேன் இந்தப் படத்தின் மூலம் தனுஷ் தனது சகோதரர் செல்வ ராகவனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார் என்பத்தலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவனும் எரு முக்கிய வேடத்தில் நடிப்பத்து குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இருவரும் துள்ளுவதோ இளமை, கண்டு கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது நானே வருவேன் படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.







