முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் பாதை பராமரிப்பு-மதுரை கோட்டத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 ம் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை – மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

ராஜபாளையம் – சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை – மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 15 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

விருதுநகர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 14 15 ஆகிய நாட்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த இரண்டு நாட்களும் பாலக்காடு – திருச்செந்தூர் விரைவு ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியவை திண்டுக்கல் – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உதயநிதி உருவப்படத்தை எரித்து அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Niruban Chakkaaravarthi

புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

EZHILARASAN D

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு

G SaravanaKumar