முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு : வெள்ளத்தால் பாதிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு – அமைச்சர் உறுதி

ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் பவானியில், காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு காரணமாக வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வருவாய் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதையடுத்து முகாம்களில் உள்ள பொதுமக்களை வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் மக்களுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தாக கூறினார். வெள்ள பாதிப்பால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கிடவும், மற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் குறித்து சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எங்கள் பக்கத்திலிருந்து வரும் செய்திகள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது – விஜய் மக்கள் இயக்கம்

Vel Prasanth

கோவை – சீரடி தனியார் ரயில் சேவை: பயணிகள் உற்சாகம்!

Web Editor

பொங்கல் வெளியீட்டில் இதுவரை வென்றது யார்?…அஜித்தா?…விஜய்யா?…

Web Editor