சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கமாட்சி நகரில் ரமேஷ், சத்யா தம்பதி வசித்து வந்தனர். ரமேஷ் கொத்தனராகவும், சத்தியா மின்வாரிய அலுவலகத்திலும் பணியாற்றினார். இவர்கள் காலை வழக்கம் போல் வீட்டை பூட்டிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். மதியம் அரவது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சத்தியா, அவரது கணவர் ரமேஷ் இருவரும் வீட்டிற்கு வந்து முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர் மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—அனகா காளமேகன்