தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படம் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் எதிரொலி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்
இந்நிலையில், பின்னணி இசையமைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளார் அனிருத். மேலும், “ஷாருக்கானை பார்த்து வளர்ந்தவன் நான். இதுவரை நான் இசை அமைத்ததிலேயே இந்தப் படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கும்” என அனிருத் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா








