இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து சமத்துவ நோன்பினை கடைப்பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆண்டிற்கான நோன்பினை கடைப்பிடித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் கடந்த மூன்று…

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து சமத்துவ நோன்பினை கடைப்பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆண்டிற்கான நோன்பினை கடைப்பிடித்தார்.

இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில், அந்த மாதம் முழுவதும் நோன்பினை கடைபிடிப்பார்கள். அதற்காக அதிகாலையிலேயே எழுந்து தண்ணீர் அருந்தாமலும், எந்த விதமான உணவையும் உட்கொள்ளாமலும் நோன்பு இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஒருங்கிணைக்கும் 19 ஆம் ஆண்டு சமத்துவ நோன்பினை கடைபிடிக்கும் நிகழ்ச்சி சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நோன்பு நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எங்களது கட்சியினுடைய இஸ்லாமிய நண்பர்கள் கடந்த 19 வருடங்களாக நோன்பினை கடைபிடித்து வருகினற்னர்.

தொடக்கத்தில் ஒரு நாள், இரண்டு நாள் என்று நோம்பு கடைப்பிடித்தேன். கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஐந்து நாட்களாக நோன்பினை கடைபிடித்து வருகிறேன். நோன்பிற்கு முன்னதாக விடிற்காலை 4.00 மணிக்கு உணவருந்தி விட்டு மாலை 6 மணி வரை நோம்பினை கடைபிடிக்கிறேன்.

இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. இஸ்லாமிய சகோதரர்களுடன் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் ஒரு சகோதரத்துவ நெருக்கத்தை கொண்டுள்ளது. மேலும் இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் என தொல். திருமாவளவன் தெரிவித்தார் .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.