முக்கியச் செய்திகள் தமிழகம்

காலை சிற்றுண்டி திட்டம்; முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார். 

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்காக தமிழக அரசு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். இந்தத் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சூடான, சத்தான உணவை சமைத்து, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்புமா, கோதுமை ரவா, வெண் பொங்கல், கிச்சடி உள்ளிட்டவை காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார்.

முன்னதாக நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். நெல் பேட்டையில் அமைக்கப்ப ட்டுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தையும் பார்வையிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், மேயர் இந்திராணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

காலையில் மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு, மாலையில் விருதுநகரில் திமுக சார்பாக நடைபெறும் முப்பெரும் விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

சென்னையில் இளம் இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்

Web Editor

உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

EZHILARASAN D