முக்கியச் செய்திகள் சினிமா

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது வெந்து தணிந்தது காடு

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் சிம்பு நடித்த வெந்தது தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியானது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என திரையரங்குகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அதிகாலை முதல் நாள் முதல் காட்சி திரையிடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதனை காண வந்த ரசிகர்கள் சுமார் 2 மணியிலிருந்து டிஜே கலை நிகழ்ச்சி மற்றும் மேளதாளங்களுடன் சேர்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நடனமாடி முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடினர்.


குறிப்பாக நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்களிடையே
மிகச்சிறந்த வரவேற்பு இருக்கும். இவர்கள் இருவரும் முன்னதாக விண்ணைத் தாண்டி
வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் இணைந்து வெற்றியை கொடுத்த நிலையில், இந்த வரிசையில் இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து
தணிந்தது காடு படம் இன்று பெரும் வரவேற்பை பெற்று ரிலீசாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளியில் மதமாற்ற புகார் : தலைமைச் செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ்

EZHILARASAN D

டெல்டாவில் முதலமைச்சர் ஆய்வு; நிவாரண உதவிகளும் வழங்கினார்

EZHILARASAN D

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Jayapriya