வெடிக்குண்டு மிரட்டல்; அவசரமான தரையிறக்கப்பட்ட விமானம்

இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று இரவு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 6e2126 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது…

இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று இரவு பாட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு 6e2126 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணியில் பையில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதோடு, விமான நிலைய அதிகாரிகள்  மற்றும் வெடிக்குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வெடிக்குண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். ஆனால் வெடிக்குண்டு கிடைக்கவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர், இண்டிகோ விமானத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்தததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள், பயணிகள் மற்றும் விமானத்திலும் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்த வெடிக்குண்டும் சிக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் அனைத்து பயணிகளும் பத்திரமாக இருப்பதாகவும், இந்த விமானத்தின் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.