கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் தலைமைச் செயலகத்தில் இருந்து பணிகளை நேரடியாக கவனிக்கவுள்ளார்.
மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் சென்ருந்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் அவர் தன்னைதானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, அவர் காணொலி வாயிலாக பல்வேறு பணிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தார்.
முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூலை 12 ஆம் தேதி மாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை 14ஆம் தேதி ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 18 ஆம் தேதி வீடு திரும்பிய ஸ்டாலின், தனது இல்லத்தில் ஒய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சர், ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கனியாமூர் தனியார் பள்ளியில் நேர்ந்த வன்முறை தொடர்பாகவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார்.








