ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

மத்தியபிரதேசத்தில் இருந்து தெலங்கானா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

மத்தியபிரதேசத்தில் இருந்து தெலங்கானா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நோக்கி, இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6இ 7308 விமானம் பயணம் செய்துகொண்டு இருந்தது.

இந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் அவசர கதியில் தரையிறக்க நாக்பூர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாக்பூர் வந்ததும் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து விமானத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்தது. அங்கு பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து விசாரணையும் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.