சென்னை, கோவையில் 2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, கோவையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு  மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து,  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு…

சென்னை, கோவையில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு  மீண்டும் நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து,  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை, கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று 2 பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது.  சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் தனியார் பள்ளி மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நேற்றிரவு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.  அந்த பள்ளிகளில் இன்று தேர்வுகள் நடைபெறும் நிலையில்,  முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.  வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் அப்பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.