ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் – ஆர்வத்துடன் ரத்தம் தானம் செய்த இளைஞர்கள்!

ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை,  ஸ்ரீபெரும்புதுார்…

ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,  ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை,  ஸ்ரீபெரும்புதுார் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை,  அரன் தன்னார்வலர்கள் இணைந்து இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயபாரதி தலைமையில் நடைபெற்றது.  மேலும் இதில் ரத்த தானம் செய்ய வந்தவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,  பெண்கள்,  தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ரத்ததானம் செய்தனர்.  மேலும் ரத்ததானம் செய்தவற்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும்,  கேடயங்களும் வழங்கப்பட்டது.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.