எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வசித்த அதே அரசு இல்லத்தில் தொடர்ந்து வசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவி ஏற்றதை அடுத்து, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு அரசு வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலி செய்யப்பட்ட பின்னர் அந்த வீடுகள் புதுப்பிக்கப்பட்டு அமைச்சர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முன்னாள் துணை முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் வசித்த இல்லம் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்த இல்லம், தற்போதைய சபாநாயகர் அப்பாவு-விற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிரக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக இருந்தபோது வசித்த அதே அரசு வீட்டில் இப்போதும் வசிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அரசு சார்பில் அவருக்கு அதே வீடு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.







