பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்துக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட் பிரவீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலைய பூட்டை…

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பென்னாகரம் மாஜிஸ்திரேட் பிரவீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலைய பூட்டை உடைத்து உள்ளே சென்ற வழக்கில் கைதான நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கத்தை இன்று தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மாஜிஸ்திரேட் பிரவீனா நேரில் சந்தித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

அண்மைச் செய்தி: ‘‘பிரதமர் மோடி வழி நடப்போம்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை’

இதனை அடுத்து ஆகஸ்ட் 29 வரை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கே.பி.ராமலிங்கத்தை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய போலீசார், அவர் உடல் நலம் பெரும் வரை போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். உடல் நலம் குணமடைந்தவுடன் கே.பி.ராமலிங்கம் சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.