கடந்த 2006 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வேட்டையாடு விளையாடு”. இப்படத்தில் கமலுடன் கமலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திறுதனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர். கவுதம் மேனன் வேட்டையாடு விளையாடு பாகம் இரண்டிற்கான கதை வைத்திருப்பதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
ஆனால், இத்தகவல் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான முன்னெடுப்புகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்கு
னர் கவுதமிடம் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் குறித்து பல முறை கேட்டுவந்தனர்.
ஆனால் லாக்டவுன், தேர்தல் எனப் பல காரணங்களால் கமலிடம் வேட்டையாடு விளையாடு கதை குறித்து கவுதம் மேனன், கமலிடம் பேச இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விக்ரம் படம் மூலம் கமல் திரையுலகிற்கு மாபெரும் வெற்றியோடு கம் பேக் கொடுத்தார். மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இவ்விழாவைச் செப்டம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் கலந்து கொள்வார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்ளும் பட்சத்தில் வேட்டையாடு விளைடாடு பாகம் 2 குறித்து அறிவிப்பையும் அப்படத்தையும் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனமே தயாரிக்கும் எனும் அறிவிப்பையும் வெளியிடுவார்கள் எனக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதனால், இந்த இசைவெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.







