பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்தியா ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாட்டில் நிறைவு பெரும் வகையில் கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் இருந்து கூடலூர் பேருந்து நிலையம் வரை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் நடைபயணத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி மேற்கொண்டார்.
பின்னர் கூடலூரில் ஒற்றுமை நடைப்பயணத்தை முடித்துக் கொண்ட ராகுல்காந்தி அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கூடலூர் வனம் நிறைந்த அழகான அமைதியான இதமாக பகுதியாக உள்ளது. கூடலூரில் மூன்று மொழிகள், மூன்று கலாச்சாரம் என பண்பாட்டு மிக்க பகுதியாக அமைந்துள்ளது. இந்த இடம் மூன்று மொழிகளையும் மதிக்கும் பகுதியாக உள்ளது. இந்த நடை பயணத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்தியாவில் தமிழ், மலையாளம், கர்நாடகா உட்பட அனைத்து மொழிகளையும் பேசும் நாடாக திகழ வேண்டும் என்பதே இந்த நடை பயணத்தின் குறிக்கோளாகும். ஆனால் சில இயக்கங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பு தன்மையையும், மக்களிடையே வேற்றுமையையும், அமைதியையும் சீர்கெடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினர்.
இங்கு பாஜக ஒரே நாடு, ஒரே மொழி என்ற விஷமத்தன்மையை புகுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். பாஜக ஆளாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்களை கொண்டு அரசு நிர்வாகத்தில் தலையிடுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி வருவதாக குற்றம் சாட்டிய அவர், மத்திய அரசு மாநில அரசுகளிடம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு மாநிலங்களுக்கு என தனி மொழிகள் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
சிறுகுறுதொழில் நிறுவனங்களை நடந்துபவர்கள், ஜி.எஸ்.டியானது தங்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதாகவும், அதில் உள்ள வடிவமைப்பில் நிறைய குழப்பம் உள்ளதாக தெரிவித்தனர். பணமிழப்பு குறித்து மக்களிடம் கேட்டதில் இது ஒரு மிகப்பெரிய பேரிடர் என பதிலளித்தனர். அதேபோல் இந்தியாவில் உள்ள ஒருசில பெரும் முதலாளிகளிக்குதான் இந்த ஜி.எஸ்.டி. உதவுகிறது என கூறிய அவர், இறுதியாக கூடலூரில் அமைந்துள்ள இயற்கை அழகையை ரசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
கூடலூர் நகரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தொகை உள்ளிட்ட காங்கிரஸ்
கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







