நானே வருவேன் என்று அடம் பிடித்து விட்டுத் தான் இன்று பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டிருக்கு வந்தேன் எனப் பேசினார்.
சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றும் படக்குழுவினை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பார்த்திபன் மேடையில் பேசும்போது கண்ணாடி அணிந்து கொண்டு பேசுங்கள் என விக்ரம் சொல்ல அதை ஏற்றுக் கொண்டு கண்ணாடியை அணிந்து பேசிய நடிகர் பார்த்திபன், “நானே வருவேன் என்று அடம் பிடித்து விட்டு தான் இன்று பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டிருக்கு வந்தேன். தஞ்சாவூர் சென்று படத்தைப் பார்த்துவிட்டு ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தலாம் என்று இருந்தேன்.
ரொம்ப நாள் காதலித்த இந்த பொன்னியின் செல்வன் படம் இப்போது ஆடியன்ஸ்க்கு நாளை செல்கிறது. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் அனைவரின் பிகன் நான். நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். ஒரு ஆறு வாரத்திற்கு இந்த படத்தின் ஆரவாரம் எல்லா தியேட்டரிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதுவரைக்கும் எந்த படத்திற்கும் எவ்வளவு பெரிய பரபரப்பை பிரஷரை சந்தித்ததில்லை. இயக்குநர் மணிரத்தினம் மற்றும் துணை இயக்குநர்கள் ஆர்ட் டைரக்டர் என அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். எல்லா படங்களும் கடைசியாக உங்களிடம் தான் வந்து சேரும் எனவே ஒரு முறை குறைவாக இந்த மாதிரி சரித்திர படங்களைப் பார்க்க வேண்டாம் என பத்திரிகையாளர்கள் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.







