இந்த மாதிரி நான் நடித்த படங்களில் எதற்குமே இந்தஅளவிற்கு ப்ரமோஷனுக்காக சென்றதில்லை.
சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றும் படக்குழுவினை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய திரிஷா, “ நம்ம சென்னையில் ஆரம்பமானது முடிப்பதும் சென்னையில் தான் ஏனென்றால் இது ஹோம் டவுன். படங்கள் ரிலீசுக்கு முன்பு படபடப்பு எப்போதும் இருக்காது ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு இருக்கிறது. இந்த மாதிரி நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு ப்ரமோஷனுக்காக சென்றதில்லை.
வட இந்தியாவிற்குச் சென்றாலும் கூட தமிழ்ப் படம் குறித்து அதிகமாகப் பேசுகிறார்கள் வரவேற்றார்கள். இயக்குநர் மணிரத்தினத்திற்கு ரொம்ப நன்றி. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பொன்னியின் செல்வன் படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமைப் படுவீர்கள்” எனப் பேசினார்.







