காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் பாஜக புதிய  வீடியோ வெளியீடு

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக, காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் பாஜக புதிய  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் 4 லட்சம்…

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக, காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் பாஜக புதிய  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடைபெற்றதாக, காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் புதிய  வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது, ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து பல ஊழல்கள் நடைபெற்றதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் , காமன்வெல்த் போட்டி ஊழல் என பல ஊழல்கள் நடைபெற்றதாகவும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 69 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் ((48,20,69,00,00,000 கோடி)) நடைபெற்றதாக பாஜக அதில் குற்றம்சாட்டியுள்ளது.

சுமார் மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவின்  முதல் எபிசோட் என்ற பெயரில் பாஜக வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  இது வெறும் ட்ரெயலர் தான் என்றும் அந்த பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.