பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும்! – மு.க.ஸ்டாலின்

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள, கருணாநிதி அரங்கில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”, என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்…

பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனி இலாகா உருவாக்கப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள, கருணாநிதி அரங்கில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”, என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார். திமுக ஆட்சி மீண்டும் மலரும் என்றும், மக்களின் கவலைகள் யாவும் தீரும், என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கருணாநிதி வழியில், 100 நாட்களில் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றுவேன், என குறிப்பிட்ட ஸ்டாலின், பதவியேற்ற அடுத்தநாளே பொதுமக்களின் குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்தார். அத்துடன் பொதுமக்களின் பிரச்னைகளை தீர்க்க, தனி இலாகா அமைக்கப்படும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply