மேடையில் வைத்து மல்யுத்த வீரர் ஒருவரை பாஜக எம்.பி.பிரிஜ்பூஷண் சரண் சிங், இரண்டு முறை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஞ்சி மாநிலம் ஷஹீத் கன்பத் ராய் உள்விளையாட்டு அரங்கத்தில் 15 வயதுக்கு உட்பட்ட தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நிகழ்வு நடைபெற்றது. அதில் பாஜக எம்.பி.பிரிஜ்பூஷண் சரண் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும் இவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மல்யுத்த வீரர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த எம்.பி.சரண் சிங்கிடம் போட்டியில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி கேட்டார். வயது மிகுதியால் போட்டியில் கலந்துகொள்ள இயலாது என்று அவருக்கு எம்.பி.சரண் சிங் எடுத்துக் கூறியும் அவர் திரும்பப் திரும்ப போட்டியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண் சிங் மல்யுத்த வீரரின் கண்ணத்தில் இரண்டு முறை அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரல் ஆனது. இதனால் சற்று நேரம் அரங்கமே பரபரப்பில் ஆழ்ந்தது.








