பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒமிக்ரான் தொற்று முன்னெச்சரிக்கையாக பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும்,
பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து டிசம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.








