இந்த முன்னாள் மாடல் யார் என தெரிகிறதா?

ஜவுளி கடை ஒன்றுக்காக போஸ் கொடுக்கும் இந்த முன்னாள் மாடல் யார் என தெரிகிறதா? மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ்தான் இவர். மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த இவர், தனது…

ஜவுளி கடை ஒன்றுக்காக போஸ் கொடுக்கும் இந்த முன்னாள் மாடல் யார் என தெரிகிறதா?

மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ்தான் இவர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த இவர், தனது இளம் வயதில் மாடலாக இருந்தவர். நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக இவர் மாடலாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 2006-ஐ ஒட்டிய ஆண்டுகளில் இவர் நாக்பூரின் ஜவுளிக் கடை ஒன்றுக்காக கொடுத்த போஸ்தான் இவை.

நாக்பூரைச் சேர்ந்த ஜவுளிக் கடை ஒன்றின் விளம்பரத்திற்காக விவேக் ராணடே எனும் புகைப்படக் கலைஞர், தேவேந்திர பட்னவிசின் புகைப்படங்களை எடுத்து அளித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஜவுளிக் கடை, அக்காலத்தில் நாக்பூரில் 5 இடங்களில் மிகப் பெரிய ஹோர்டிங்ஸ்களை வைத்துள்ளது.

அக்காலத்தில், தேவேந்திர பட்னவிஸ் சமையல் கலைஞராகவும் போஸ் கொடுத்துள்ளார்.

தேவேந்திர பட்னவிஸ் மாடலாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டர் நிறுவனம் தற்போது பகிர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.