முக்கியச் செய்திகள் இந்தியா

பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவு

182 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெல்வதற்கு அம்மாநில பாஜக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக பாஜக பொதுமக்களிடமிருந்து தங்கள் தேர்தல் செலவிற்கான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அக்கட்சி தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வரும் டிசம்பர் மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ளுவிதமாக, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஹர்திக் பாட்டீல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டார். அவர் விரைவில் பாஜக முகாமில் அடைக்கலமாவார் எனத் தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது ஒருபுறமிருக்க, அம்மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் சிஆர் பாட்டீல் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவிற்கு தேவையான நிதியை பொதுமக்கள் மற்றும் பாஜக அனுதாபிகளிடமிருந்து பிரிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு இலக்காக ரூ.200 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிம் பேசிய பாட்டீல், பாஜகவின் தேர்தலுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் காசோலையாக மட்டுமே வழங்க வேண்டும். ரொக்கப்பணம் பெற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறினார். மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான நிதியாக, தேசிய தலைமை 163 கோடி ரூபாய் கொடுத்தது. குஜராத் பாஜக 88 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி கொடுத்தது. ஆக மொத்தம் 253 கோடி ரூபாய் தேர்தல் செலவிற்காக திரட்டப்பட்டது. இந்த முறை மாநில நிர்வாகமே தேர்தல் செலவிற்காக 200 கோடி ரூபாயை திரட்டுவது என முடிவு செய்துள்ளது எனக் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சீட்டை உடைத்த விஜய் ரசிகர்கள்; மீம்ஸ் போடும் தியேட்டர்!

G SaravanaKumar

இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி

Vandhana

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

Gayathri Venkatesan