முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வீர சாவர்க்கர் குறித்த விமர்சனம்: ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தல்

வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது மகாராஷ்டிராவை அடைந்துள்ள நிலையில், அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகா சபையின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான வீர சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆங்கிலேயேர்களுக்கு வீர சாவர்க்கர் உதவியதாகவும் அவர்களின் ஆதரவை எதிர்பார்த்து  கருணை மனு கொடுத்ததாகவும் கூறிய ராகுல்காந்தி அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தையும் வெளியிட்டார். ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பாத்ரா, நாட்டின் பெருமையாக விளங்கிய வீர சாவர்க்கரை ராகுல்காந்தி அவமரியாதை செய்திருப்பதாகத் தெரிவித்தார். வீர சாவர்க்கர் மிகச் சிறந்த விடுதலைப் போராட்ட வீரர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே புகழாரம் சூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள சம்பிட் பாத்ரா, இந்திரா காந்தி சொல்வது பொய்யா அல்லது ராகுல்காந்தி சொல்வது பொய்யா என சோனியாகாந்தி குடும்பம் விளக்க வேண்டும் என்றார்.  தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்றார்கள் என சோனியா காந்தி குடும்பம் நினைத்துக்கொண்டிருப்பதாகவும் சம்பிட் பாத்ரா காட்டமாக தெரிவித்தார்.

இதற்கிடையே வீர சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனாவின் உத்தவ்தாக்ரே பிரிவு தலைவர் உத்தவ்தாக்ரேவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி சொன்னது தவறு என தெரிவித்துள்ள உத்தவ்தாக்ரே, வீர சாவர்க்கர் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் கூறினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்

EZHILARASAN D

ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு விடுத்த ஆளுநர்!

Halley Karthik

தமன் இசையில் உருவாக உள்ள ஷங்கரின் தெலுங்கு திரைப்படம்

EZHILARASAN D