நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜகவினால் வெல்ல முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் , பிரிவினை மற்றும் மதவாத கட்சி என்பதால், பாஜகவை புதுச்சேரியில் இருந்து விரட்டி அடிப்போம், என்று குறிப்பிட்டார். அடுத்ததாக புதுச்சேரி தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம், என்றும் தெரிவித்தார். மேலும், புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மூன்று முறை வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற முடியாது என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 26ஆம் தேதி டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.