திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் நான்உயிரை மாய்த்துக்கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா ஆவேசமாகக் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 104 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் அன்வர்ராஜா கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவினர் கூறுவதை சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது எனக் கூறினார்.தமிழகத்தில் நீட் தேர்வை திமுக தலைவர் ஸ்டாலின் ரத்து செய்தால், தான்உயிரை மாய்த்துக்கொள்வதாக ஆவேசமாகத் தெரிவித்தார்.