அந்தியூர் அருகே காதலித்த பெண்ணை மணம் முடிக்க முடியாததால் இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்திருக்கிறார். இதை தன் பெற்றோர்களிடமும் கூறியிருக்கிறார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் ஜாதக பொருத்தம் இல்லாததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மயில்சாமி வீட்டின் அருகிலுள்ள 90 அடி ஆழ கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







