அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் பாஜக!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும்…

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும் அது திரும்பி வரும் என்பது நன்றாகத் தெரிந்தும் அதனை வைத்து அரசியல் செய்யலாம் என்பது தப்புக் கணக்கு என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்ட முன் வடிவை மீண்டும் அனுப்புவதால் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை மருத்துவப் படிப்பை எண்ணிப் பார்க்காத மலை கிராமத்து மக்களுக்கும் கிராமத்து சகோதர சகோதரிகளுக்கும் நீட் தேர்வின் மூலம் வாய்ப்பு கிடைப்பதாகவும், பிரதமரின் முயற்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

https://twitter.com/annamalai_k/status/1489638506947170306

ஏழை எளிய மக்கள் அதிக பணம் கொடுக்காமல் மருத்துவம் படிக்க மகத்தான பொது வாய்ப்பினை உருவாக்கித் தரும் நீட் தேர்வுதான் சமூக நீதிக்கான அடையாளம் எனத் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை,

இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கண் துடைப்பு என்பதால் பாஜக பங்கேற்காமல் விலகிக் கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.