கோவாவில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

எதிர் கட்சிகளின் அமளியின் மத்தியில், கோவா சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில்  இன்று, ‘கோவா மாநில சட்டமன்றத்தில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் மசோதாவை முன்மொழிந்தார். மேலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா 2024 ஆம் ஆண்டு இதே நாளில் அறிமுகப் படுத்தப்பட்டது. ஒரு வருடம்  நிலுவையில்  இருந்த இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிகட்சிகளில் அமளியால் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் முதல் மசோதா இதுவாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.