ரயிலில் உள்ளாடையுடன் அலைந்த பீகார் எம்.எல்.ஏ மீது விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகாரில், ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், கோபால் மண்டல். ஆளும் கட்சி எம்.எல்.ஏவான இவர், தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில், பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் பயணம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த இவர், பனியன் மற்றும் உள்ளாடையுடன் அலைந் துள்ளார். உடன் பயணித்த பயணிகள், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ இப் படி அலைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பனியன் உள்ளாடையுடன் அவர் வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாயின. இதுபற்றி விளக்கம் அளித்த கோபால் மண்டல் எம்.எல்.ஏ, ’வயிற் றுப் பிரச்னை காரணமாக, அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியிருந்தது. அதனால் அப்படி யிருந்தேன். இது பொய்யில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் செய்தி யாளர்கள் கேட்டனர். அப்போது அவர், இதுபற்றி எம்.எல்.ஏ கோபால் மண்டலிடம் விசார ணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.